வஞ்சகம் சூழ்ச்சி வலிகளை யூட்டல்
நெஞ்சு வெடிக்க நித்திய வினைகள்
பஞ்ச மின்றி பாதகம் செய்தல்
பண்பை மறந்த பணிகளில் சிந்தை!
அஞ்சா தெங்கே அகப்படும் சுகமும்
அஞ்சுதற் கஞ்சவும்
அச்சம் அச்சம்
எஞ்சிய வாழ்வை
இழுத்துச் செல்ல
நஞ்சை விழுங்கி
நகர்ந்திடும் போக்கு!
முற்காலத்தை மூடினற் அழுந்த
தற்காலத்தை தலைதனில் சுமந்து
பொற்காலமென புதுப்பெயரிட்டார்!
கலி காலத்து கடனும் மிவையோ
கட்டளை யொன்றின் கடைவிதி இதுவோ
மலிவாய் போச்சு மகத்துவ வாழ்வு
மனித மிறந்தது மனதினில் இன்று!
No Comment! Be the first one.