இன்று புதிதாய் இத்தரை பிறந்தேன்
என்றன் நடையில் என்கால் இடறல்
வென்று சிறப்பது விதியின் மகிமை
வெல்வதில் காட்டணும் வினையின் திறமை!
இடையிடை இடர்கள் இன்னல் அனைத்தும்
தடையிடும் சுவர்தான் தாண்டணும் மரபு
கடையிடும் பொருள்களில் களவும் போகும்
கடனெனில் கடையும்
கடலினில் மூழ்கும்!
இருளும் ஒளியும் இரண்டற கலந்த
இம்மை மறுமை இலக்கணம் வாழ்வில்
அருள்வான் அவனின் அகஒளி தன்னில்
ஆட்படு வோனே அண்டம் ஆள்வான்!
No Comment! Be the first one.