நேற்றைய மகிழ்ச்சியை இன்று
கொண்டாடாத மனம் – அதற்கு
முந்தைய கவலைக்காக
இன்றும் வருந்துகின்றது..!
குழந்தைகளை நல்லவர்களாக
வளர்க்க சிறந்த வழி – அவர்களை
மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்..!
விட்டுக் கொடுங்கள் – அல்லது
விட்டு விடுங்கள்
மகிழ்ச்சி நிலைக்கும்..!
தேவையற்ற எண்ணங்களை
சிந்தித்து கவலை அடைவது
சாத்தியம் என்றால் – தேவையான
எண்ணங்களை சிந்தித்து மகிழ்ச்சி
அடைவதும் சாத்தியமே..!
மகிழ்ச்சி என்பது நல்ல
ஆரோக்கியமும் – குறைந்த
ஞாபக சக்தியும் தான்..!
மகிழ்ச்சியின் எல்லை
பெரும்பாலும் ஆரோகியதின்
வாசலாக அமைகிறது..!
நடப்பதெல்லாம் நன்மைக்கே
என நினைத்து வாழ பழகி விட்டால் –
மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல
வேண்டியதில்லை மகிழ்ச்சி
நம்மை தேடி வரும்..!
உங்களின் உச்சகட்ட பயத்தில் தான் –
உங்களின் உச்சகட்ட மகிழ்ச்சி
ஒளிந்து கொண்டு இருக்கிறது..!
ஒரு எண்ணத்தை சிந்தித்தவுடன்
கவலை வருவது சாத்தியம் என்றால்
வேறு ஒரு எண்ணத்தை சிந்தித்து
மகிழ்ச்சி அடைவதும் சாத்தியமே..!