நீங்கள் இன்னொருவரை மனதார
பாராட்டும் போது உங்கள் இருவரின்
மனமும் மனதார மகிழ்ச்சி அடையும்..!
சோகம்.., கடினம்.., கவலை..,
துக்கம் மிகுந்த நேரங்களில்
அதை சற்றும் அனுபவிக்க
முடியா வண்ணம் இறைவன் தரும்
அந்த சந்தோஷம் மிகவும்
கொடுமையானது..!
சந்தோஷத்தை தேடி அலைவதை
நிறுத்திய போது தான் தெரிந்தது..
எதையும் தேடி அலையாமல்
இருப்பதே சந்தோஷம் தான் என்று..!
அடுத்தவர்களிடம் இருப்பவை
எல்லாம் நம்மிடம் இருக்கிறதா
என்று பார்க்கிறோமே தவிர..
நம்மிடம் இருப்பவை எத்தனை
பேரிடம் இருக்கிறது என்று பார்க்க
தவறி விடுகிறோம்.. நம் சந்தோஷம்
அழியத் தொடங்கும் இடம்
அது தான்..!
வாழ்க்கையில் வசதி சந்தோஷம்
எல்லாம் ஆடம்பரத்தில் இல்லை..
நாம் அமைத்துக் கொள்வதில்
தான் இருக்கிறது..!
வாழ்க்கையில் சந்தோஷம்
வேண்டுமென்றால் இரண்டு பேரைக்
கண்டுக்கவே கூடாது..
ஒன்று நமக்கு பிடிக்காதவர்கள்..!
மற்றொன்று நம்மைப் பிடிக்காதவர்கள்..!
எதுவும் இல்லாதவனுக்கு எது
கிடைத்தாலும் அது சந்தோஷம்..
எல்லாம் இருப்பவனுக்கு
எது கிடைத்தாலும்
அது அலட்சியம்..!
எனக்கு கிடைக்காத ஒன்றை
இன்று வரை தேடிக் கொண்டு தான்
இருக்கின்றேன்.. சந்தோஷம்..!
உயிர் இருக்கும் வரை சந்தோஷமாக
வாழ வேண்டும் என்பதை விட..
நிம்மதியாக வாழ வேண்டும்
No Comment! Be the first one.