வாழ் கை

பணம் சேர்ப்பதிலும் துக்கம், சேர்த்தபின் காப்பதிலும் துக்கம், இழந்தாலும் துக்கம்,
செலவழித்தாலும் துக்கம். பணத்தால் எந்நிலையிலும் துக்கம்தான்.
எத்தனைக் கட்டைகள் போட்டாலும் நெருப்புக்குத் திருப்தியில்லை,
எத்தனை நதிகள் நீரைக் கொட்டினாலும் சமுத்திரத்திற்கு திருப்தியில்லை.
எத்தனை ஜீவராசிகளை கொண்டு சென்றாலும் எமனுக்குத் திருப்தியில்லை.
உலகில் காமம், கள், சூதாட்டம், வேட்டை, கடுஞ்சொல், குரூரச்செயல்,
பேராசை என ஏழுவித தீச்செயல்கள் உள்ளன.
உலகில் ஐந்து விதமான தோஷங்கள் இருந்தாலும்
ஆசை என்பதிலிருந்துதான் இந்த ஏழு செயல்களும் கிளையாக பிரிகின்றது.
குறைவு, ஊழல், ஆசை, அழிவு, தவறான கொள்கை என்பதே ஐந்து தோஷங்கள்.
நல்லவர்கள் பேச்சில் உண்மை புரியாது.
தீயவர்கள் பேச்சில் உண்மைகள் மறைந்திருந்தாலும் தேன்தடவிய தித்திப்பாய் இனிக்கும்.
தன்னல மறுப்புடன் உதவி செய்வதில் திடசித்தமுடையவர்கள் எதற்கும் தயங்கமாட்டார்.
உயிர் போனாலும் போகட்டும் நண்பனுக்கு நன்மை செய்தால் சரி என கருதுவர்.
பகைவனையும் நோயையும் தலை தூக்கியவுடன் பூரணமாக ஒழித்துவிட வேண்டும்.
இல்லையெனில் அவை வளர்ந்து பலம் பெற்று விடும்.
துவேஷம் பாராட்டுவதற்கு துஷ்டர்கள் காரணம் தேடுவதில்லை.
அறவழியில் நிற்பதற்கு நல்லவனும் காரணம் தேடுவதில்லை.
அது அவரவர் சுபாவ குணம். கரும்பு இனிப்பதும் எழுமிச்சை
புளிப்பதும் அதனதன் இயற்கையான குணங்கள்.
சாணைக்கல் தானாக எதையும் வெட்ட முடியாதபோதும்,
கத்தியை கூர்மையாக்கி தருவது போல் வலிமையற்றவன்
தீமை செய்வதற்கு இன்னெருவனை ஏவிவிடுவான்.
நடத்தை கெட்டவனிடம் தான் பெண் சோரம் போகிறாள்.
அயோக்கியர்களுடன்தான் தலைவன் சேருவான்.
கருமியிடம்தான் பணம் குவியும்.
மலைமீதும் கடல்மீதும்தான் மழை அதிகமாகப் பெய்யும்.
தன்னை அறிவதே கஷ்டமான வேலை.
எது சரியான வேலை, எது வீண் வேலை, என அறிவது கஷ்டம
கடுமையான சொல்லில் நன்மை இருக்கிறதா என்று பார்.
அது எப்போதும் விஷமானது இல்லை.
தித்திக்கும் பேச்சில் துரோக சிந்தனை இருக்கின்றதா என்றுபார்.
அது எப்போதும் அமிர்தமாயிருக்காது.
எத்தனை வயது,
என்ன தலைவிதி,
எவ்வளவு சொத்து,
எத்தனைக் கல்வியறிவு,
எங்கே சாவு
என்ற இந்த ஐந்தும் ஒருவன்
கர்பத்திலிருக்கும்போதே
நிர்ணயக்கப்டுகின்றன.
May be an image of 1 person
All reactions:

Jerad Tharmi, Stelaanantharasa Stela and 74 others