anaiyuran

வாழ்க்கை

இன்பம் இன்பம் என்றொரு போதையில்
இளமைக் கழிப்பு பலநாளும்
துன்ப மெண்ணாது துணை யுடனிருந்து
தூக்கத்தை கலைத்தல் சிலநாளும்

அன்பெனும் பிடியுள் அடங்கிய இன்பம்
அகல அகல அது தோறும்
தன்பிடி யிருந்த தக்க யிளமை
தனதறியாது வெளியேறும்!

மேனிக் கரைய மிகுநோய் நுழைய
மேயும் கண்ணின் ஒளிபோகும்
ஆனி வேராய் ஆன உயிரது
ஆட்டமாட வலி மேவும்!

விதிக்குள் சிக்கிடும் விதியு முண்டு
விலக்கிலை எவரும் அறியாரே
மதிக்குள் தெளிவு மலரும் நாளில்
மண்ணி லவரும் இலைபாரே!