தந்தையும் மகளும்

தந்தையும் மகளும்
தன் பசி மறந்து
பிள்ளைகளின் பசி
போக்குபவர் தந்தை…
தந்தைமாருக்கு மட்டும்
தான் தெரியும் தன்
மகளுக்கு தான்
அடிமை என்று..
பிள்ளைகளுக்கு மட்டும்
கேட்ட வரம் எல்லாம்
கிடைக்கும் தந்தை
எனும் தெய்வத்திடம்
இருந்து..
ஒருவரின் வெற்றிக்கு
பின்னால் யார் யார்
இருக்கிறார்கள் என்று
தெரியாது ஆனால் நிச்சயம்
தந்தையின் உழைப்பு
இருக்கும். அதை பலரும்
புரிந்து கொள்ள
தவறுகிறார்கள்..
உலகில் விலை கொடுத்து
வாங்க முடியாத சிம்மாசனம்
தந்தையின் தோள்கள்..
பெண் பிள்ளைகள்
வளர்ந்ததும் ஆண்களை
கண்டு அச்சம் கொள்ளாமல்
வாழத் தொடங்குவது
தந்தையின் அன்பையும்
அரவணைப்பையும்
கண்டு தான்..
நல்ல தந்தையிடம்
வளர்ந்த பெண் பிள்ளைகளின்
எண்ணங்கள் ஆண்களை
பற்றி அழகானதாகவே
இருக்கும்..
தான் அனுபவித்த
கஷ்டங்களையும்
துன்பங்களையும்
தன் பிள்ளைகள்
அனுபவிக்க கூடாது
என்று நினைத்து உழைக்கிற
தந்தையின் இதயம்
புனிதமானது.
பிள்ளைகளுக்கு மட்டுமே
கிடைத்த பொக்கிஷம்
தந்தையின் பாதுகாப்பும்
அரவணைப்பும்…
இந்த உலகில் ஒரு
பெண்ணை தந்தையை
காட்டிலும் வேறு யாராலும்
அதிகமாக நேசிக்க முடியாது
என்பதே உண்மை..
எவ்வளவு கோபம் என்றாலும்
தன் குழந்தைகள் மீது
கொண்ட அக்கறையை
குறைத்துக் கொள்ளாத
தந்தையின் அன்பை மிஞ்சும்
அளவிற்கு வேறு எந்த அன்பும்
இந்த உலகில் இல்லை…
தன் பிள்ளைகளை
உயரத்தில் ஏற்ற தான்
தலை குனிந்த தந்தையை
மீண்டும் நீங்கள் தலை
குனிய வைத்து விடாதீர்கள்..
எவ்வளவு சுமையையும்
சாதாரணமாக தூக்கம்
தந்தைக்கு தன்
பிள்ளைகளை தூக்கும்
போது மட்டும் வரும்
பயத்திற்கு ஈடு
இணையே இல்லை..
பெற்ற பிள்ளைகளை
தெய்வமாக நினைப்பது
உண்மையான தெய்வம்
தந்தை மட்டும் தான்…
ஆயிரம் உறவுகள் அருகில்
இருந்து ஆறுதல் சொல்லி
அணைத்தாலும் தந்தையின்
அரவணைப்புக்கு ஈடு ஆகாது.
தன்னிடம் காசு இல்லை
என்று தன் பிள்ளைகளிடம்
கூறும் போது தந்தைக்கு
வரும் சோகம்
மிகப் பெரியது..
ஆண்கள் நம்பிக்கைக்கு
உரியவர்கள், பாதுகாப்பானவர்கள்,
அன்பானவர்கள், அக்கறை
உடையவர்கள், ஒழுக்கமானவர்கள்
என உணர வைக்கும்
முதல் ஆண் தந்தை தான்.