வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு
தரைக்கு தான் வரவேண்டும்.
வார்த்தையால் பேசுவதை விட
வாழ்ந்து காட்டுவதே சிறப்பு
தனியே நின்றாலும் தன்மானத்தோடு
நிற்ப்பதில் தவறில்லை.
ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை
ஒரு அவமானம் பெற்றுத் தரும்!
நோயும் கடனும் எதிர்பார்ப்பும் இல்லாதவனின்
தூக்கம் மிகவும் சுகமானது.
அன்பு செய்யும் ஒருவனால் தான் பிறருடைய
அன்பை உணர முடியும்.
நடக்காத.. கிடைக்காத.. ஒன்றின் மீது
தான் ஆசை அதிகமாக வருகிறது..!
துனியாத வரை வாழ்க்கை பயங்காட்டும்,
துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.
ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாக யோசித்தால்
நம் எதிர்பார்ப்பே தவறு என்று புரியும்..!
இல்லாத போது தேடல் அதிகம்…
இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்..
இதுதான் வாழ்க்கை…
தாமரை இலையை போல இரு.
தேவையில்லாத சிந்தனைகளை மனதில்
தேவையில்லை