சிலுவை

புனித வெள்ளி

புனித வெள்ளி
பரமாத்மா இன்று சிலுவையில்
ஏற்றப்பட்டது.
ஜீவாத்மாவின் பாவங்கள் அவன் உதிரத்தால்
கழுவப்பட்டது.
மனித மனங்களின் வக்கிரங்களின்
உச்சம்…..
தெய்வத்தையே சோதித்தது.
இரண்டு திருடர்களோடு ஒன்றாய்
ஏற்றி அவமானப்படுத்தியது.
தான் படைத்த உயிர்களுக்காய்
மண்ணிறங்கி வந்து
சகமனிதனாய் வாழ்ந்து
நாம் செய்த பாவங்கள் தீர்க்க
தொலைந்த ஆடுகளைத் தேடும்
நல் மேய்ப்பனாய்
வலங்கைப் பிடித்து பாவ
விலங்கை உடைக்க
அவர் சட்டையின் கீழ்
நம்மை அரவணைத்து
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே
என்னிடத்தில் வாருங்கள்
இளைப்பாறுதல் தருவேன்
என்று உறுதியளித்து
உன் பாதைக்கு நான்
வெளிச்சமாய் இருப்பேன் என்றுரைத்த
தகப்பனுக்கு நாம் தந்த பரிசு
நாம் செய்த கைம்மாறு
சிலுவையில் ஏற்றியது.
இருந்தும்
இவர்கள் செய்வது இன்னதென்று
அறியாதவர்கள் இவர்களை
மன்னியும் என்று
அத்தனைத் துன்பத்திலும்…
அத்தனை அவமானத்திலும்
நமக்காய் பிதாவினடத்தில்
வேண்டிய இயேசுவை
இந்நாளில் நாம் நினைப்போம்.
நினைத்து அவன் பாதம் போற்றுவோம்.
அவன் கைப்பற்றி வாழ்வில் நடப்போம்.