உழைப்பவர் உள்ளம் கேட்கும்
ஒருநூறு கேள்விக் கிங்கு
அழைத்தொரு பதிலை சொல்ல
ஆட்களே இல்லை பாரு
இழைத்தனர் தீங்கு தன்னை
இதனிலும் இன்பம் கண்டார்
பிழைப்பிலே பேதம் பாரு
பிழையெங்கு உருவு மாச்சு!
தீயிலே வெந்தார் கொஞ்சம்
தீபட்டு மாண்டார் கொஞ்சம்
பாயிலே வீழ்ந்தார் கொஞ்சம்
பஞ்சத்தில் நலிந்தார் கொஞ்சம்
வாயிலே துணியை வைத்து
வலியிலே துடித்தார் கொஞ்சம்
நோயிலே துடித்தார் உண்டு
நோன்புதான் நித்தம் நித்தம்!
உரிமையை உடைத்துப் போட்டார்
உறவதைப் பிரித்துப் போட்டார்
வரவதை பிடுங்கிக் கொண்டார்
வரவர அடுக்கிக் கொண்டார்
பொறுமையை மதித்தா ரில்லை
புவியறம் புரிந்தா ரில்லை
சரிவிடு என்றே போக
சனியினும் விலக வில்லை!
No Comment! Be the first one.