அங்கம் குருதியில் அயர்வின் மிகுதியில்
மங்கும் பார்வை மயக்கத்தின் அமைதியில்
அந்தோ சுமக்கின்றார் -சிலுவை
அறைய நடக்கின்றார்
அன்பின் வேதம் அறிவின் நாதம்
தன்னலம் எண்ணா
தன்னொளிர் கிருபை
கண்ணில் சுமக்கின்றார்–இயேசு
கருணையை சுமக்கின்றார்!
உடல்பொருள் ஆவி
உலகம் துய்த்திட
இடவல இன்னல்
இதயம் அகன்றிட
நடைதனில் தளர்வை
நரம்பு தளர்த்திட–ஒரு
கொடைபோல் காக்கின்றார்!
கடையெனும் கண்டு
கால அரக்கனின்
கைகளில் விழுந்து
கரைதான் காண
காளைத் தொழுவத்தில் கர்த்தரும்
உயிர்க்கின்றார்–எழிற்
காசினி வளர்க்கின்றார்!
No Comment! Be the first one.