பேரிளம் மாதவள் பெண்மையின் இலக்கணம்
காரிகை காதலின் கனவே
ஊரிளம் காளைகள் ஊர்வலம் அவளிடம்
உண்மையின் தத்துவ அழகே!
யாருளம் கவர்ந்தவள் ஏதுளம் புகுந்தவள்
இம்மையில் ஊர்வசி அவளே
ஈருளம் போற்றிடும் இவளுரு காவிய
இன்பப் படைப்பதன் பொருளே!
நித்திய தவத்ததை நெஞ்சில் இருத்திடும்
நிலையதை ஊக்கிடும் எழிலே
புத்தியில் புதிதொரு பூத்திடும் சிந்தையை
புறந்தனில் தள்ளிடும் பொழிலே!
ஒற்றை நினைப்பினில் ஊறிய தவிப்பினில்
கற்றிடத் துடிக்கும் கலையே
அற்ற நொடிதனில் அத்தனை சரிவும்
அறிந்தால் இல்லை விலையே!
No Comment! Be the first one.