கட்டியிழுக்கும் பார்வையில் விழுந்தேன்
கட்டழகென்ற போர்வையில் மிதந்தேன்
விட்டகலாத காதல்-மனம்
தொட்டுஎழுப்புது கூதல்!
ஒட்டிய ஆசை மெட்டு இசைக்க
கிட்டிய கற்பனை கிளர்ச்சியு மூட்ட
கட்டியப் பாட்டு காதில்–அந்த
கவித்தேன் காண்பேன் ஏதில்!
இரவும் உறவும் இயல்பும் கனிவும்
வரவும் செலவும்
வாய்த்தது புகழ்வேன்
துறவை மறந்த நேரம்–என்
தூக்கம் நகர்ந்தது ஓரம்!
அவளா நானா அடைந்தது வெற்றி
அப்படி கேள்வி எழுந்தது சுற்றி
சுவரே சொல்லனும் நீதி
சொன்னால் வெட்க ஜோதி!