ஆசையில் தொடங்கி ஆட்டத்தில் திளைப்பது
ஆடவன் திருப் பயணம்
பூஜையில் கலந்து புனிதத்தில் லயிப்பது
பூவையர் பெரும் பயணம்!
இணைப்பும் பிணைப்பும் இருநிலைப்பாலும்
இளமையில் ஒரு கலவை
அணைப்பும் சகிப்பும் அரிய தவிப்பும்
அதனிடை ஒரு அளவை!
உச்சம் பிரிவு ஊடே நிகழ்வு
ஓய்வுக்கு வரும் நிழலே
இச்சையின் இம்சை இன்பத்து அசலே
இனங்காணா ஒரு அருளே!
எண்ணிப் பார்க்க இன்னொரு நாளில்
இதயத்தில் வெட்கம் வரும்
பின்னில் முதுமை பிண்ணி கலந்திட
பேசவும் அச்சம் வரும்!
No Comment! Be the first one.