காசு இல்லாதவன் சொல்லும் அனுபவமே காசு இல்லாதவனுக்கு உதவும்

காசு உள்ளவன் சொல்லும் அறிவுரை,
காசு உள்ளவனுக்கு தான் உதவும்.
காசு இல்லாதவன் சொல்லும் அனுபவமே
காசு இல்லாதவனுக்கு உதவும்.
நண்பர்கள் கூட எதிரிகள் ஆவார்.
நிலை தாழ்ந்தால்.
எதிரிகள் கூட நண்பர்கள் ஆவார்.
நிலை உயர்ந்தால்.
யாரிடமும் ஏமாந்திட கூடாது
என்று எண்ணும் மனது.
யாரையும் ஏமாற்றிட கூடாது
என்று எண்ணுவதில்லை.
வியர்வை சிந்தாது வாழ்ந்தால்!
கடைசியில், ஏதோ ஒரு விதத்தில்,
கண்ணீர் சிந்தி தான் தீரவேண்டும்.
பொய் பேசி உருவான பகைகளை விட.
மெய் பேசியதால் உருவான
பகைகளே அதிகம்.
பொய்” பேசி வாழ்ந்தால்,
“ஆயிரம் உறவுகள்” மொய்க்கும்
“ஈ” போல்.
“மெய்” பேசி வாழ்ந்தால்,
“ஒரே ஒரு உறவு” மட்டுமே ஒட்டும்
“அட்டை” போல்.
அது தான் உன்னை “மனசாட்சி”.
பிடித்தவரோடு சிரித்து பேசு.
பிடிக்காதவரோடு சிந்தித்து பேசு.
அர்த்தமில்லா ஆசைகளும்,
தேடலில்லா தேவைகளும்,
குறிக்கோளில்லா வாழ்க்கையும்,
ஒருவரை ஏழையாக்கும்.
நீங்கள் தங்கத்தை உரசி பார்க்காமல் வாங்கலாம்.
ஆனால் அதை திருப்பி கொடுக்கும் போது
அவன் அச்சு பார்த்து தான் வாங்குவான்.
அவன் உங்கள் மீது வைக்கவில்லையே நம்பிகை!