விழிப்புணர்வு உன்னிடத்தில் நிகழ்ந்து விட்டால்
விடியலுக்காக நீ காத்திருக்க வேண்டாம்,
விடியல் உனக்காக காத்திருக்கும்!
உள்ளங்கள் இணைந்து விட்டால்
உல்லாசத்திற்காக நீ காத்திருக்க வேண்டாம்,
உல்லாசம் உங்களுக்காக காத்திருக்கும்!
உன்னில் இருக்கும் உள்ளிருப்பை உணர்ந்து விட்டால்
வேண்டுதலின் மூலம் பெறுவதற்காக நீ காத்திருக்க வேண்டாம்,
உனக்கு கொடுப்பதற்காக இயற்கை காத்திருக்கிறது!!
உனக்குள் இருக்கும் இறைத் தன்மையை உணர்ந்து விட்டால்
பேரானந்த உணர்விற்காக நீ காத்திருக்க வேண்டாம்,
அந்த பேரானந்தமே நீ தான் அனுபவம் கிட்டும்!!
ஆக,
எதையும் தேடிப் பெறுவதற்கும்,
கேட்டுப் பெறுவதற்கும் ஒன்றும் இல்லை
உனக்குள் இருக்கும் உன்னதத்தை
உணர்ந்தால்
உள்ளமும் சதிராடும்,
உவகையும் கைகோர்க்கும்
உற்சாகமும் கரகாட்டம் ஆடும்
No Comment! Be the first one.