உறவுகள் ஒன்று அன்பைத் தரும் இல்லை அனுபவத்தை தரும். அன்பைத் தந்தால் பெற்றுக் கொள்வோம்.
அனுபவத்தை தந்தால் கற்றுக் கொள்வோம்.
வெள்ளம் வந்து சென்ற – நதி சுத்தமாகும். துன்பம் வந்து சென்ற – மனம் பக்குவப்படும்.
மறதி” வியாதி என்று யார் சொன்னது? என் வாழ்க்கைக்கு மருந்தே
தாகம் தணிந்த பின் தண்ணீரின் தேவை குறைவு.
மனம் மறுத்து போன பின் கண்ணீரின் அளவும் குறைவு
இரக்கம் இல்லாதவர்களிடம் இதயத்தை கொடுத்து விட்டால்,
உறக்கம் இல்லா இரவுகள் பல நமதாகிவிடும்.
தாங்கக்கூடிய வலியை மட்டுமே படைத்தவன் கொடுப்பான் என்று
எண்ணும் பக்குவப்பட்ட மனிதருக்கு ஆறுதல் தேவையில்லை.!”
“தொழில் எத்தனை கீழ்த்தரமானாலும் அதைச் செய்வதில் அவமானம் ஒன்றும் இல்லை.
சோம்பேறியாகத் திரிவதுதான் அவமானம்.”
“உழைத்துக் கொண்டே இருங்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு வாழ்வில் சலிப்பே வராது.”
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.”
“கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள்,
மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள்.”
“இலட்சியம் என்று ஒன்று இல்லாவிட்டால் முயற்சி என்ற
சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்!”
“பணத்தின் மதிப்பு தெரிந்தவனே! சிக்கனமாக செலவு செய்பவன்..!!”
தன்னம்பிக்கை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான்
நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பை போன்றது அது திரும்பி வராது
ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை ஆகும்
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கண்கள்
அறிவை விட புனிதமான ஆன்மா அதிகப் பலனை தரவல்லது
No Comment! Be the first one.