எப்படி சொல்ல முயன்றாலும் அத்தனைப் பஞ்சம்- என் சொற்களுக்கும் கற்பனைக்கும் உன்னை எழுத

வெட்கங் கெட்டவனாய்
வீதியில் திரிந்து கொண்டும்,
ஊடக நினைப்பில்
உதாரியாய் ஊர்சுற்றி
காரணமறியாமல் நான்…
தேய்ந்து வரும் நிலவை
வளர் பிறையோடு எப்படி
ஒப்பீடு செய்ய…
உன்னைப் பார்த்தே
தினமும் பூக்க முற்படும்
தாழை’யாக நான்…
உன்னைப் போலவே தினமும்
பூக்க பன்னிரண்டு வருடம்
தவம் இருக்கும் குறிஞ்சி
மலரானேன்
உருவகம் காட்ட முற்ப்பட்டு
தோற்கிறேன்- ஒப்பீடு என்பதே
இல்லாதவளுக்கு!
எப்படி சொல்ல முயன்றாலும்
அத்தனைப் பஞ்சம்- என்
சொற்களுக்கும்
கற்பனைக்கும் உன்னை எழுத!!!
ஆயினும் விழைகிறேன்.
அன்புத் தோழியான
அழகுத் தேவதைக்கு
அன்பான
வாழ்த்துகள்

கூற…

உயிர் நீ இன்று உதித்ததனால்
என் மெய் என்பதிங்கு உலவுதடி
என்னுள் துடிக்கும் ஓர் உயிராய்
என்றும் இருக்கும் கண்மணியே..
புது அழகிய மலரே நீ என்றும்
புன்னகை பூத்து குலுங்க என் வாழ்த்து
என் காலம் என்பது முடியும் வரை
உன்னை கண்ணுள் வைத்து காத்திருப்பேன்.
இந்த கன்னித் தமிழால் என்னவளுக்கு
உன் காதலன் எழுதும் வாழ்த்து மடல்
இனிய
பிறந்த நாள்
நல்

வாழ்த்துகள்

💚