சர்ப்பம் தந்த பாவத்தை
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்…
மரத்தால் விளைந்த பாவத்தை
வரத்தால் களைந்த
மந்திர நாள்.
வார்த்தை ஒன்று
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.
தொழுவம் ஒன்று
தொழுகை பெற்ற
திருநாள்…
ஒதுக்கப்பட்டவை
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.
ஆடிடைக் கூட்டில்
ஆதவன் உதித்த
அதிசய நாள்.
இந்த வரிகள் ஆழமும் அழகு
கட்டில் கூட இல்லாமற் பிறந்தவரை,
பகட்டில் பிறக்கவைக்கின்றது உலகம்…
அதற்காக,
அலங்காரங்களே தேவையில்லை என்று ஒதுக்கிவிடவும் கூடாது.
இந்த அலங்காரங்கள் எத்தனையோ குடும்பங்களின் உயிர்காக்கும்
அனைவருக்கும் விழா நாள் வாழ்த்துக்கள்