பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே அமரர் ஜோ .இதயறாணி

பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே

உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ

பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே

நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே.

 

 மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே?

கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து

உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக்

காணிக்கையாக்குகிறோம்.

 

அன்புக்கும் பண்பிற்கும் ஓர் தாயாய் ஆளாகி இப்புவியில் பெருமை சேர்த்து

இல்லறத்தில் றஞ்சனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்லறத்தில்

ஆண்டு பல கழிந்து இன்புற்று வாழும் காலம் இறைவனுக்கும்

இனிபோதும் என்றாகிவிட்டதன்றோ

விதியின் வினைப் பயனால் விண்ணுலகிற்கு சென்றுவிட்டீர்கள்

அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடன் அரவணைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவரே,

உங்கள் பிரிவால் துயரும் கணவர் மற்றும் பிள்ளைகள் ஆறுதல்

கூறுவதுடன் ஆண்டவனை பிராத்திக்கிறோம்.

 

 பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்பது என்ன விதிவிலக்கா?

இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா?

பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே இறைவனைத் தினம்தினம் வேண்டி

அவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன் உன் உயிரினை மீட்டுத் தருவனோ?

ஆனையூரான்