அந்த காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை. ஆனால் எல்லோரிடமும் நேரம் இருந்தது. இந்த காலத்தில் யாரிடமும் நேரம் இல்லை. ஆனால் எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது.

பணத்திற்காக வேலை செய்யும்
பணப் பேய்களுக்குகு தெரியாது.
பாசமும் பணியும் பணத்தை விட
உயர்ந்தது என்று.
சில சந்தர்ப்பங்கள் உன்னை
முட்டாள் ஆக்கலாம் அது பரவாயில்லை..!
ஆனால் அது உன்னை
முடவனாக்கி விடாமல் பார்த்துக்கொள்…!!
கஷ்டங்களை நினைத்து
கஷ்டப்படுவதை விட்டுவிட்டு.
கஷ்டங்களை காதலித்து பார்.
உன் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை அது காட்டும்.
சலனம் இல்லாத நீரில்தான்
பிம்பம் தெளிவாக தெரியும்
மனம் அமைதியாக இருந்தால் தான்
புத்தி தெளிவாக இருக்கும்…
அந்த காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை.
ஆனால் எல்லோரிடமும் நேரம் இருந்தது.
இந்த காலத்தில் யாரிடமும் நேரம் இல்லை.
ஆனால் எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது.
கடனாக இருந்தாலும் சரி.
அன்பாக இருந்தாலும் சரி.
பகையாக இருந்தாலும் சரி
திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு..!