உண்மை

நீங்களும் நானும் மரணத்தை நோக்கியே
ஓடுகிறோம் மறவாதீர்கள்

இன்றே கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்
நல்லவர்கள் மத்தியில் தீயவர்கள் புகுந்தாலும், தீயவர்கள் மத்தியில் ஒரு நல்லவர் புகுந்தாலும்,

அதன் விளைவுகள் வெவ்வேறாகும்.

உங்களை பார்த்து விமர்சனம் செய்பவன் இயலாதவன்.

அவனை பார்த்து புன்னகைத்து கடந்து செல்வது தான் சிறந்தது

படைத்தவன் கொடுத்தனுப்பும் முதலீட்டு “நேரம்”…! பயன்படுத்தி “எழுவதும்”,

வீணடித்து “வீழ்வதும்”, அவரவர் முயற்சியில்…!

நினைப்பதெல்லாம், நடப்பதில்லை …
நடப்பதெல்லாம், பிடிப்பதில்லை …
பிடிப்பதெல்லாம், நிலைப்பதில்லை, …
நிலைப்பதெல்லாம், நல்லதாய் இருப்பதில்லை …
நல்லதெல்லாம், நாம் என்றுமே நினைப்பதில்லை …
அதனால் … நினைப்பதெல்லாம், நடப்பதில்லை.

பொய்யே பொய்யாகிவிடும்,
சிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.
உண்மையும் பொய்யாகிவிடும்,
கடுகளவும் பொய் இருந்து விட்டால்.
இது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்.