என நெஞ்சில் நிறைந்தவள்

எத்தனை தவம் நான் செய்தேனோ
ஒற்றை திங்கள் உனை சேர
இங்கொரு பிறவி எடுத்தேனோ
ஊனில் ஊறும் உயிரெனெவே
உன்னோடே உனக்குள்ளே வாழ்வேன்
தொலைவினில் எரியும்
மலை விளக்கொளியாய்
தெரிந்திடும் உன் முகம்
அலையினில் தவழும்
இலை என நாளும்
மிதந்திடும் என் மனம்
மழையில் நனயும்
மழலை போலே
என் நெஞ்சம் ஆடும்
அங்கும் இங்குமே
தலையைக்கோதும்
தலைவன் நீயே
மழைக்கேங்கிய பூமியும் நானே
முதல் மழையாய் நனைத்தவள் நீயே
உன் அன்பில் கரைந்தே போனேன்
உயிர் ஈரமாகமனம் ஓரமாக
நீ தந்தாயே எனக்குள்ளே மாற்றம்
என் காதல் தந்தவள் நீயே
என் உயிரில் கலந்தவள் தானே
உன் துணையாய் வருவேன் நானே
நெற்றி குங்குமம் நீ சூட
உன்னாலே பொங்கும்_இன்பமே
என் தனிமையில் உன்னை தந்தாய்
உறவாகவே நீயும் வந்தாய்
இரு இதயங்கள் சேரும் நேரம்
சொர்கம் எங்கும் காதல் சங்கீதம்..
.