ஆன்மா லயப்படும் இடமாகி
ஆத்மா அழ்குற விளை யாடும்
ஆலயம் இடம்தோறும் விளங்கிடவே
ஆவலுடன் மாந்தர் அமைத்திடுவர்
மனித சமூகம் அவனியிலே மேம்படவே
மகிமைசேர் கலை பல கண்டிடலாம்
மக்களின் மாண்புறு சிறப்புதனை
மங்காது காத்திடும் ஆலயங்கள்
மாக்களை மக்களாய் வழிப்படுத்த
மானிடகலைகளை நெறிப்படுத்த
பயிற்சிகள் பாவனைகள் பல அங்கு
பாரினிலே தாங்கின ஆலயங்கள்
பரத முனி காட்டிய பரதகலை
பாவ ராக தாளமாகி நயமுடனே
தரணியது பாவனைகள் பலவாக
தார்மீக கலை காட்டும் ஆலயங்கள்
கற்சிலை காட்டினவே சிற்பக்கலை
காவியமாய் காட்டின ஓவியங்கள்
நாவிதழ்கள் ஓதின புராணங்கள்
தேடி தேடி காட்டின ஆலயங்கள்
கோவில் இல்லா ஊரினிலே குடிகல் வேன்டாம்
பாவியில்லா ஊரினிலே பண்பு வாழும்
நாங்கலுடனே தரணியிலே வாழ்ந்திடவே
தேடி தேடி வண்ங்கிடவே ஆலயங்கள்
No Comment! Be the first one.