அழகு அழகு என்று வியந்திட வைக்கும்
அழகு எனப் போற்றும் உலக அழகு எத்தனை
அழகு தமிழிலில் பேசுவது பேரின்பம்
அழகு இயற்கையை ரசிப்பது பேரின்பம்
வருடிச் செல்லும் விசும் தென்றல் ஓர் அழகு
வளைவுடன் நகர்ந்து பாய்ந்து வரும் நதியும் ஓர் அழகு
பச்சை கம்பளம் விரித்ததுபோல் மலை சாரல் ஓர் அழகு
மலைமேல் யானை படுத்தது போல் படிந்த முகில் கூட்டம் ஓர் அழகு
வானத்தில் இயற்கை வரைந்த வானவில் ஓர் அழகு
வானமதில் பவனி வரும் பல வர்ண முகில் கூட்டம் ஓர் அழகு
முகில் கூட்டம் இடையே தோன்றும் வெண் மதியும் ஓர் அழகு
வானத்தில் மின்னுகின்ற மின்மினிகூட்டம் ஓர் அழகு
வானம் தொடும் நவீன கட்டிடங்கள் ஓர் அழகு
வானத்தை ஊடுருவும் வான ஊர்தி தரும் இரைச்சலொலியும் அழகு
பூத்துக்குலுங்கும் வர்ணமிகு மலர் கூட்டம் ஓர் அழகு
பூக்காது அசைந்தாடும் மரங்கள் ஓர் அழகு
இயற்கையோடு அமைந்த எம் வாழ்வு பேரின்பம்
இறைவன் படைப்பு தரும் இயற்கையே பேரழகு
No Comment! Be the first one.