விளையாடுவதை நாம்
நிறுத்தி கொள்ளும் போது
நம்முடன் விளையாட
ஆரம்பிக்கிறது வாழ்க்கை.
உலகில் பல நூறு தெய்வங்கள் இருக்கலாம்.
பல கோடி மனிதர்கள் இருக்கலாம்.
மனிதர்கள் பயப்பட வேண்டிய தெய்வம்.
அவர் அவர் “மனசாட்சி”.
ஒரு விளக்கு இன்னொரு விளக்குக்கு
ஒளி கொடுப்பதால் எதையும் இழந்து விடாது..!
நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவுவோம்.
அதனால், நாம் இழக்க போவது ஏதுமில்லை..!!
ஆண்டவரை விட சிறந்த இயக்குநர் இல்லை.
அடுத்தடுத்து என்ன காட்சி வைத்திருக்கிறார்
என்று ஊகிக்க முடியாது.
உண்மையான உறவுகளுக்கு விட்டு கொடுங்கள்.
ஏன் என்றால் அது “பாசம்”.
உறவு என்ற பெயரில் உங்களை பயன்படுத்தி
கொண்டிருப்பவரை விட்டு விடுங்கள்.
ஏன் என்றால் அது “வேசம்”.
அடுத்தவன் அடுப்பில் என்ன “அவிகிறது”
என்று ஆராய்ச்சி செய்யாதீர்கள்.
உங்கள் அடுப்பில் என்ன
“கருகுகிறது” என்று கவனியுங்கள்.
வாழ்க்கை ஒன்றும் மல்யுத்த மைதானம் அல்ல.
நம் பலத்தை ஒவ்வொருவரிடமும் நிருபித்துக் கொண்டிருக்க.
எல்லாவற்றையும் வெற்றி, தோல்வியால் தீர்மானிக்க முடியாது.
No Comment! Be the first one.