காக்கக் காக்க கருணை விழிகள்
கந்த னருளினில் உண்டு
சேர்க்க சேர்க்க செவ்வேல் துணைவரும்
சிங்கார வேலவத் தொண்டு!
ஈர்க்க ஈர்க்க ஈசன் மகனின்
ஈர்ப்பு நமக்கு உண்டு
யார்க்கும் யார்க்கும் யாதும் கொடுக்கும்
கந்தக் கவச மொன்று!
தந்தைக் கறிவு தந்தநல் லழகன்
எந்தை யானவன் மண்ணில்
விந்தை யிவனது வீரச் செறிவு
விளங்கும் சூரன் கதையொன்னில்!
கந்தனைத் தொழுது கைவிளக் கேற்று
கார்த்திகை தீபம் ஒளிர
அந்தத் தணிகை அழகுடை முருகன்
அருள்வான் சித்தம் குளிர