அறுபடை கொண்டெழில் அடையாள மானவன்
ஆறுமுக வடிவேலவன்–அவன்
திருவுடை வேல் கொண்ட திருவெற்றிதானது
திருச்செந்தூர் மணிவேலவன்!
வருந்திரள் வழியெங்கும் வான்முட்ட கோஷத்தை
வழங்கிட பழநி மலை–எழிற்
திருவெட்ட திருத்தணி திசைமேற்கில் அமர்ந்தவன்
திருசுப்பிர மணியல்லவோ!
கேட்பார்க்கும் கேளார்க்கும் கிடைத்திட அருள்செய்ய
கிரிவலம் வரு வானவன்–கந்த
கோட்டத்து கோவிலுள் கோனாக நின்று வான்
கொடிநாட்டி மகிழ்வா னவன்!
சிவத்துக்குப் பிறந்த சிவசிவ செகநாதன்
பவத்துக்குள் பாராள் கிறான்–ஒரு
நவத்துக்குள் நாள்தோறும் நல்லாட்சி செய்துமே
நற்சரவண குகனா கிறான்
No Comment! Be the first one.