தனிமை – நீயே எடுத்துக்கொண்டால் சுகம்.
அதுவே பிறரால் உன்னிடம் திணிக்கப்பட்டால் துக்கம்.
வரலாற்றில் இடம்பிடித்த அனைவருமே
அவர்களின் உறவுகளால் உணர்வுகள் புண்பட்டவர்களே!…
உன் வாழ்வில் வரும் சிக்கல்கள் அனைத்தும்
உன்னை சிதைக்க வந்தவை என நினைக்காதே.
உன்னை செதுக்க வந்தவை
ஊராரின் வாயை மூட நீ முயற்சி செய்வதைவிட..
உன் காதுகளை மூடிக்கொள்வது சுலபமல்லவா?…
முதுமை என தயங்காதே
ஒரு எலியின் கொஞ்சும் இளமையை விட
ஒரு புலியின் வருத்தும் முதுமை வலிமையானது.
வென்றவனுக்கும் வரலாறு உண்டு…
தோற்றவனுக்கும் வரலாறு உண்டு…
ஆனால் வேடிக்கை பார்பவனுக்கு அது இல்லை.
மகிழ்ச்சியில் தன்னம்பிக்கையும்
மகிழ்ச்சி பின் தன்னடக்கமும்
உன்னுள் குடிகொண்டால் உன்
வாழ்வில் வீழ்ச்சி என்பதே இல்லை.
கற்களால் நீ தடுக்கி விழுந்தால்
மீண்டும் எழுந்து நடப்பது சுலபம்.
ஆனால் உன் சொற்களால் நீ தடுக்கி விழுந்தால்
அதன்பின் எழுந்து நடப்பது கடினம்.
முள்ளின் வலி ஒரு நிமிடம் மட்டுமே உன்னை முடமாக்கும்.
ஆனால் நீ உதிர்க்கும் தவறான சொல்லின் வலிகளோ
வாழ்நாள் முழுவதுமே உன்னை முடங்கிப்போகச் செய்யும்.
எல்லோருக்கும் பிடித்தமாதிரி நீ இருக்க விரும்பினால்
முதலில் நீ இறந்துபோக வேண்டும்.
அப்போதுதான் அது சாத்தியமாகும்.
ஏழையாக இருப்பது தவறல்ல..
தொடர்ந்து கோழையாக இருப்பதே தவறு.
நீ வெளிச்சத்தில் இருந்தால்தான்
உன்னை உன் நிழல் கூட பின் தொடரும்.
நீ பிறருக்கு கொடுக்கும் வெங்காயத்தை விட
பிறரிடமிருந்து உனக்கு கிடைக்கும் பெருங்”காயமே”
உனக்கு சிறந்த படிப்பினையைக் கொடுக்கும்.
எவனொருவன் தன் மனதை அடக்கி ஆட்சி செய்கிறானோ
அவனை வேறு எவராலும் ஆட்சி செய்யவே முடியாது.
உன்னை மதிக்காத இடத்தில்
பிணமாக விழுந்துகிடப்பதுகூட பாவம்.
“முயலும்” வெல்லும், “ஆமை”யும் வெல்லும்.
ஆனால் “முயலாமை” என்றும் வெல்லவே வெல்லாது.
No Comment! Be the first one.