நடிக்க தெரிந்தவருக்கு வாழ்க்கை
எப்போதும் சொர்க்கம் தான்.
நடிக்க தெரியாதவருக்கு வாழ்க்கை
எப்போதும் நரகம் தான்….!
எதிர்பார்ப்பு இல்லாத
வாழ்க்கையும் இல்லை.
எதிர்பார்ப்பது எல்லாம்
வாழ்க்கையும் இல்லை.
பாசம் நேசம் எவ்வளவு தான்
வைத்திருந்தாலும்.
தேவை முடிந்த பின் அல்லது
பணம் தீர்ந்த பின் நீங்கள்
யாரோ ஒருவர் ஆகிவிடுவீர்கள்.
உன் வாழ்க்கையில் வெளிச்சம்
இல்லை என்று கவலைப்படாதே.
நீ வெளிச்சத்தைப் பார்க்க வேண்டும்
என்றால், கட்டாயமாக இருள் வேண்டும்.
எதற்கும் கவலைப்படாதீர்கள்.
கவலை உங்களை அழித்து விடும்.
நடப்பது நடந்தே தீரும்.
வருவது வந்தே தீரும்.
உன்னால் பயன் கிடைக்கும் வரை
நீ நல்லவன் வல்லவன்
அமைதியானவன் பொறுமையானவன்
உன்னால் எந்த வித பயனும் இல்லை என்றால்
நீ கெட்டவன்… இது தான் மனித குணம்…
உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட,
முதலில் உன் உணர்வுகளுக்கு
முக்கியத்துவம் கொடு.
ஏனெனில் உன் வாழ்வை தீர்மானிப்பது
உறவுகளல்ல உன் உணர்வுகள் தான்….!!!
தொலைந்த அத்தனையிலும்
துரோகத்தின் சாயல்…
கிடைத்த அத்தனையிலும்
நிம்மதியின் சாயல்…
வாழ்க்கையில் ரொம்ப அழகான விசயம்…
அடுத்தவர்கள் சந்தோசதையும்
அடுத்தவர்கள் வளர்ச்சியையும் பார்த்து
தானும் சந்தோஷப்படுறது தான்…!
பிரச்சனைகள சொல்லி வாழ்வது
வாழ்க்கை இல்லை..
இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு
சொல்லிவிட்டு நகர்வது தான் வாழ்க்கை…
நீந்தாத மீன்களை நதி ஒதுக்கிவிடும்..!
கேலி கிண்டல் விமர்சனம் தாண்டி
உழைக்காத மனிதனை
வாழ்க்கை ஒதுக்கிவிடும்..!!