கட்டழகு மாதர்தனை கட்டிப்பிடி கட்டிப்பிடி
விட்டகலா இன்பந்தனும் ஊறும்–அவள்
தொட்ட யிடம் துளிர்க்கும் மணம்
தூருவரை சென்றுதானே சேரும்!
அட்டியிலை அடங்கிடவே அங்கங்கும் ஒருகவிதை
ஆனந்த ராகத்திலே பிறக்கும்–எந்த
மெட்டெனினும் கவலை யிலை
மேனிதனில் தான் படர மெல்லிசைகள் வந்து தூள்பரத்தும்!
கொட்டி வைத்தான் இன்பந்தனை
குமரிகளின் தண்ணு டலில்
எட்டிவைத்தான் ஆண்மனதைத் தள்ளி
ஏங்கவைத்தான் பால்பேதம் சொல்லி!
கிட்டுகையில் கிளர்ந்து எழும்
கீழ்மேலும் புரண்டு விழும்
மொட்டவிழ்ந்த மலரிதழில் வண்டு
மொய்ப்பதிலே வியப்புமிலைக் கண்டு