ஈழ மண்ணில் இனியதோர் ஆலயம்
ஆனைக் கோட்டை அடைக்கல மாதா
வாழு வோர்க்கு வரமாய் வந்தாள்
வாரி வழங்கும் மகிமை மாதா!
புத்து யிரெடுத்த புதுமைக் கிணறு
பூத்தவ ளிவளின் பூர்வ வீடு
தத்துவம் துலங்க தரிசனம் செய்வோர்
தக்க வருளால் தழைப்பது திண்ணம்!
புரட்டாதி எட் டுவீதி எங்கும் விழா
படலைகள் தோறும் பூப் பந்தல்கள்
தேரில் அன்னை அரசி வீதி உலா
தேம்பியவர் விளிகளும்கு கருனையுலா!
ஊர் கூடித் தேரிலுக்க வீதியில்
ஊமைக்கும் பேச்சுவரும் பவண்யில்
சாதி இல்லை சமயம் இல்லை
சந்தி எங்கும் சாம்பிறானி துபமே!
நோயில் விழுந்தவர் நோன்பினை ஏற்று
பாய் விட்டெழுந்து பயணம் தொடர
தாயென உதவும் தர்மத்திலகம்
தரணியைக் காக்கும் தாயின் தாயவள்!
சேயொன் றின்றி சேவிப்போ ரொருநாள்
தாயாய் ஆவார் தந்தை மகிழ
வாயால் புகழ வார்த்தை யில்லை
வந்தனம் செய்ய வறுமை யில்லை!
உள்ளந் தன்னில் உறையத் திருப்பெயர்
எல்லாம் நடத்தும் எங்கள் மாதா
போரில் திருந்தும் நோய் லிருந்தும்
விடியல் தந்தவள் வியப்பின் மொத்தம்!
அடைக்கல மாதா அருளினை பெற்றிட
அடைக்கல மானோர் அவனியிலெந்த
தடைகளும் கண்டு தயங்கிய தில்லை
விடைபல காண விழைபவர் அதிகம்!
ஆனையூரான்
லூர்த்து அன்னை திருத்தலத்தில் இருந்து
No Comment! Be the first one.