காடுமலை நாடுயென காதல்கொண்டு பாடு–இந்த
காடுமலை நாடுதானே நாடும்நமது வீடு!
தேடும்பொருள் கூடும்வகை கொடுக்கு மியற்கைதானே–இவை
யோடு வாழும் யோகம்நமக்கு இறைவனளித்த தேனே!
செல்வச் சீரு சிறப்பு யாவும்
ஜீவ வாழ்வின் தேவை–இதை
வெல்வதற்கு வேண்டுமியற்கை
விழைந்து செய்யுசேவை!
ஐந்து பூதம் அழகு மியற்கை
அதனைப் போற்றி
அனுதினமும் பாடு-இங்கு
அதனில் ஒன்று அருகிப் போனால்
அழியும் மனிதம் அவனிக்குமே கேடு!
No Comment! Be the first one.