அவமானம் ஒரு தீ.
“ அதை அணையவிடக் கூடாது!
“ அவமானம் ஒரு உளி.
“ அது நம்மையே செதுக்கும்!
“ அவமானத்தைப் போற்ற வேண்டும்.
“ அது லட்சியத்தின் உந்து சக்தி!
“ அவமானத்தை சேமிக்க வேண்டும்.
“ அது நமது கனவுகளில் சிறகுகள்!
“ அவமானத்தை பொறுத்துக்கொண்டு
“ வாழ்வதை விட.
“ பிய்த்துக்கொண்டு வெளியே வந்தால்.
“ உணர்ச்சிகளின் விதை வெடிக்கும்!
நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது
அதுதான் நம்மை ஆட்டி வைக்கிறதாம்
என்றான் பக்தன் ஒருவன்.,
“ஆமாம் மூளை என்றேன்
பெரும்பாலானநடுநிலைவாதிகள்
தராசு முள் போலத்தான்.
எடைபோடுகிறார்கள் என
தெரிந்தால்
அந்நேரம் செயலாற்றிவிட்டு.
எஞ்சிய நேரம்
சாய வசதியான இடத்தில்
சாய்ந்து விடுகிறார்கள்.
No Comment! Be the first one.