தனித்து நின்றாலும் ஒற்றை முள்ளாக
கூர்மையாக நில்.
ஏறி மிதிக்க நினைப்பவனும் தயங்குவான்.
உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும்
நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும்
பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் வயதானால் அந்த நோய் வரும்
வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால்,
தயவு செய்து நம்பாதீர்கள்
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள்.
மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.
எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது
என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு
தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ
படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக
சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும்,
இயலாமை வரும் என்று நம்பி,
அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
முதுமை என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
No Comment! Be the first one.