கல்லையெல்லாம் காவியுடுத்தி கடவுள் என்று சொல்றாங்க

கல்லையெல்லாம் காவியுடுத்தி
கடவுள் என்று சொல்றாங்க
கடவுள் பெயரில் கொலைகள்செய்து
கடவுள்பெயரை கொல்றாங்க

மாட்டை அறுத்தல் பாவம் என்போர்
மனிசன் தலையை வெட்றாங்க
மாசா மாசம் சேத்த காசை
திருடன் காலில் கொட்டுறாங்க

உண்மைய சொன்னா பைத்தியமென்னு
ஊரே சேர்ந்து திட்டுறாங்க…
உரிமைய கேட்டா கொல்வோமுன்னு
ஊரைய விட்டு வெரட்டுறாங்க

வாக்கு வாங்கி போனவரெல்லாம்
வாயப் பாத்து நிக்குறாங்க
நாசகாரன் போட்டதையெல்லாம்
நாயப்போல நக்குறாங்க

மக்கள் வாழ்வை பேரம்பேசி
மாடிவீடு கட்டுறாங்க
மக்கள் பின்னர் ரோசம் பறந்து
வோட்டுப்போட நிக்கிறாங்க

சரக்கு கொடுத்தா கழுதைக்கும் கூட
சறுக் சறுக்கென்ன குத்துராங்க
பின்னர் பெரிசா பிரச்சின வந்தா
எம்பிக்கு ஏசி கத்துறாங்க.