மற்றவர்க்கு மத்தியில் அமைதியாக இருப்பதை விட ஓர் அடையாளமாக இருந்துப் பார்

மற்றவர்க்கு மத்தியில் அமைதியாக இருப்பதை விட
ஓர் அடையாளமாக இருந்துப் பார் அங்கு தான்
உன் திறமை வெளிப்படும்
வரும் ஏற்றுக் கொள்,
தரும் பெற்றுக் கொள்
கடும் துன்பங்களை தாங்கிக் கொள்வதன்
மூலம் சரீரம் யோகம் செய்வது போல,
பிறர் நமக்கு இழைக்கும் துன்பங்களை தாங்கிக்
கொள்வதன் மூலம் உள்ளம் தவம் செய்கிறது.
ஆரம்பத்தில் சிறிய துன்பங்கள் கூட பெரிதாக தெரியும்.
அதுவே வளர வளர உள்ளம் மறுத்துக் கொண்டே வரும்.
அதுவே ஒரு கட்டத்தில் எதையும் தாங்கிக்
கொள்ளும் சக்தி வந்துவிடும்.
துன்பங்களின் மூலம் உலகத்தைக் கற்றுக் கொண்டவன்
ஒரு ஞானியை விட சிறந்த மேதையாகிறான்.
அரம்பத்தில் துன்பம் வந்தால் அழுகை வருகிறது.
தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருந்தால்
அழுவதற்கு சக்தி இல்லாமல் போய்
வெறுப்பும் விரக்தியும், சிரிப்பும் வரும்
ஒரு கட்டத்தில் எந்த துயரம் வந்தாலும்
சிரிப்பே பழக்கமாகி விடுகிறது.
அதுவே ஞானம் பெற்று விட்டதற்கு அடையாளம்
“வாழ நினைத்தால் வாழலாம்”