உதிரும் மரங்களும் பின்பு துளிர்விட்டு தளைத்தெழும் துன்பங்களை தொடமல் யாரும் இன்பங்களை அடைய முடியாது

உதிரும் மரங்களும்
பின்பு துளிர்விட்டு தளைத்தெழும்
துன்பங்களை தொடமல் யாரும்
இன்பங்களை அடைய முடியாது
சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.
வருத்தத்தை ஒரு சிலரே
புரிந்து கொள்கிறார்கள்.
சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்.
பலர் அதையும் கேட்பதில்லை.
வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது.
சிலவற்றை சந்தோஷங்களாக.
சிலவற்றை சங்கடங்களாக.
பிரபல்யமும், செல்வமும்
கடல் நீரைப் போன்றது…!
அதனைக் குடிக்கக் குடிக்க
தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்…
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்…
இவை தான் மனிதனின் எண்ணங்கள்…!
பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது.
பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது.
அதேபோல் தான்.
நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.
நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.
வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும்.
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்.
ஆனால் எதுவும் மறந்து போகாது…!
காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை.
கண்டும் காணாமல்
போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே…!

அனைவர்க்கும்

இனிமையாக

இருக்க

அந்த இறைவனானாலும் கூட முடியாது.