ஒரு மழை துளியென்றாலும்
அதில் உன்னோடு
நனைந்திட வேண்டுகிறேன்..
பார்கின்ற பூவையெல்லாம்
உன் கூந்தலில் சூடிட
எண்ணுகிறேன்..
உன் கொலுசின் ஓசையை
புல்லாங்குழல் கொண்டு
அடைக்க துடிக்கிறேன்..
கடிகார முல்லை
கையில் பிடித்து கொள்ள
நினைக்கிறன்..
தூக்கத்தை தின்னும்
உன் கனவுக்காக
காத்துகிடக்கிறேன்.
ஒத்தையில் வாடினாலும்
ஒருதலையாய் உன்னை
காதலித்திட வேண்டும்..
No Comment! Be the first one.