கண்ணுக்குள்ளே உனை வைத்தேன் கண்களில் நீராய் நீ வழிந்தாய்

கண்ணுக்குள்ளே உனை வைத்தேன்
கண்களில் நீராய் நீ வழிந்தாய்
துடைத்துக்கொள்ள மனமில்லாமல்
துவண்டு போனேன் உன் நினைவுகளால்….
அமைதியான உன் முகம் ஆழமாய்
பதிந்த அன்று முதல் அந்நியமாய்
தெரிகின்றனர் அனைவரும்……
உன் முகம் பாரா நாட்கள்
பாறாங்கல்லாய் என் நெஞ்சை
பதம் பார்க்கிறது……….
உனை விட்டுபிரிவேன் என்ற
எண்ணத்தை கூட தொட்டு
அறியாதவள் நான்…..
கரமோடு கரம் சேர்த்து
எனை கட்டி தழுவுவாய் என்றிருந்தேன்….
கண்ணீரில் உயிர் குடித்து
கானலாய் மறைந்து போவாய்
என நினைக்கவில்லை …….