பாசத்தோடு அன்பையும் சேர்த்து தந்தவரே அக்னேசம்மா அம்மம்மா
எனக்கு மழழை பேச்சு மொழியை சொல்ல வைத்தவரே
ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே
மீன் பொரியலுட்டி மீட்பு
கதை சொன்னவரே
ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள
ஆனாலும் மனம் உங்கள் ராசா என்ற அன்புக்காக ஏங்குதம்மா
மோட்ச வாசல் திறந்த பாஸ்கா வெள்ளி
இன்று உம்மை அழைத்தாரோ இயேசு
பூசை தவறாத புண்ணியவதி
செபமாலை மூலம் நாள் தோறும்
அடைக்கல அன்னையோடு பேசுபவரே
தீபா என்ற உம் குரல் தீயாய் கொதிக்குதம்மா என் நெஞ்சில்
தீங்கற்ற தங்கமம்மா
காலமெல்லாம் கண்ணுக்குள்
உம் முகம்
நீர் கண் மூடும் போது நாம் இல்லையே அருகில்
வாண் வீட்டு முகில் நடுவே
சந்திப்போம் உம் பேரன்
ஆனையூரான்
No Comment! Be the first one.