எமது ஊரில் 1968ஆம் ஆண்டுக்கு முன்பு வெளிக் கிராமத்தவர்களின் நாடகமே மேடையேற்றப்படுவது ஒரு வழக்கமாக இருந்தது .
இதனால் ஏன் நாம் ஒரு நாடகத்தை
உருவாக்க முடியாதா என எமது
ஐக்கிய சமுகம் சிந்தித்தது .
நாம் ஒரு புதிய நாடகத்தை நாமே தயாரிப்போம் என அவர்கள் முடிவெடுத்து மேடை,நாடக பொறுப்பில் இருந்த
ச.அ. றஞ்சன் அவர்கள் முயற்சியில் கதை ஆசிரியரை எமது ஊரில் தேடுகிறார்கள்.
அவர்களின் தேடலில் கதை ஆசிரியராக ஆரோகியநாதர் நீக்கிலாப்பிள்ளை ,ராசா அவர்களிடம்
இன்பம் எங்கே நாடகக் கதையைப் பெற்று அவருடன் சேர்ந்து
அமரர் நவஜீவா இயக்கத்தில் நாடகம்
உருவாகிறது. முக்கிய பாத்திரத்தில் சே.புவிராசசிங்கம், மரியாதைக்குரிய தங்கத்துரை உட்பட பலர் நடித்தனர்.
இந்த நாடக கலைஞர்கள் அனைவருக்கும் எமது ஊர் மைந்தர்கள் . மூன்று மணி நேரம் கொண்ட நாடகம் மேடையேற்றும் போது பலத்த
வரவேற்பு பெற்றது இரண்டாவது தடவையும் இந்த நாடகம் எமது ஊரில்
மேடையேற்றப்பட்டதுடன், இதைவிட வேறு பல கிராமங்களிலும் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது. இவ்வாறாக எமது ஊரில் முதல் முதலாக
நாடகம் ஆரம்பிக்கப்பட்டது.
நாடகத்தின் மூலம் கிடைத்த காசை கொண்டே 1969-1970 ஆண்டு காலபகுதியில் எமது ஆலய மேடைப் புட்டியும், சிறு கட்டடமும் ஆரம்பத்தில் நிறுவப்பட்டது.
இதற்கு எந்த ஆலய ,ஆயர் இல்ல அனுமதிகள் ஒன்றுமே பெறாது மக்களின் முடிவிலேயே நடைபெற்றது.
இதன் பின்னரே எமது ஊரில் பல நாடகங்களும் நாடக கதை ஆசிரியர்களும் தோற்றம் பெற்றார்கள்.
No Comment! Be the first one.