காகிதக் கோப்புகளும் கத்தோலிக்க பிறசில் கதகதப்பு பேச்சுக்களும்!!
கண்கவர் வண்ணங்களும்
கட்டுப்பாடின்றி எண்ணங்களும் தம்பித்துரை அண்ணாவியார்!!
கவலைக்கு இடமில்லை
கற்பனைக்கும், கனவுக்கும் குறையில்லை!!
மகிழ்ச்சிக்கு அளவில்லை
மனதுக்குள் கலைக்கும் தடையில்லை!!
மறைந்துவிட்ட உங்கள் உறவின் 25 ஆண்டுகள் நீங்காத நினைவுகள் இன்று!!
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின்
உலராத வாசனையும் பொண்ணிச் சேபமாலை போன்ற பல நாட்டுக்கூத்துகளும் ஜயா !!
மருந்து விருந்து போன்ற நாடகத்தால்
ஊரில் பருந்தக பறந்தவர்!!
முழுவதும் பெண்களைக் கொண்டு
நாட்டுக்கூத்தை மேடையேற்றிய
இலங்கையின் முதல் சாதனையாளர் !!
உம் கைப்படா குருக்களின் பக்தி இலக்கியம் உண்டோ யாழ் மண்ணில்!!
வடக்கில் புகழ் பூத்த அண்ணாவியார்
இவரும் ஒருவர் ஆனையூர் மைந்தன்!!
இழந்த அன்பரின் நீங்காத பொழுதுகள்
ஆனையூர் இதயம் துடிக்கும் வரை மாறாது
உம் எட்டடி தாளம்கள்!!
இயற்கையின் அழைப்பு மீற முடியாத பயணம்
நீர் சென்ற தூரமோ மீள முடியாத பாதை!!
கலையரசு சொர்கலிங்கம் கௌரவித்த
கலைச்சுடர் கலையரசே!!
கண்முன் உங்கள் விம்பம்
காலத்தை கடந்தும் உம்மால் ஆனையூர் புகழ் பூக்கிறது இந்த உலக பூங்காவில்!!
அன்னாந்து பார்கிறேன் அண்ணாவியர்
உங்கள்
தமிழ் புரவலன் ஆனையூரான்