பிறர் வீழ்கின்றபோது பலரால் சிரித்திட முடியும்!!
பிறர் வெற்றி பெறுகின்றபோது சிலரால் மட்டும் சிரிக்கமுடியும் அது பாலு!!
சோதனைச்சாவடி பல தாண்டி வீடுதேடி வந்து சுகம் விசாரிப்பார்!!
தகுதி இருந்தும் தன்னடக்கம் உள்ள முதுமைக்கு முகடு இவர்!!
நன்நொறி இயக்கம் நடத்தி ஊர்க் கல்வி உயத்தியவர்!!
இடப் பெயர்வு தொலைத்த உலகமது!!
ஆனையூர் மக்கள் கூப்பிட்டவுடன் ஓடி வந்து உதவும் பல்லாக்குமிவர்!!
சமாதான நீதிவான் பட்டம் பெற்று சாட்சி பெறா மாக்களுண்டோ!!
முதியோர் ஊதியம் வாங்கிக் கொடுக்கா தாய்க் குலம் உண்டோ!!
பல ஆண்டு பாலர் பாடசாலையை பாரமெடுத்து எழுத்தறிவித்த ஏடு இவர்!!
பாலர்கள் மகிழ்சி பரமன் மகிழ்சி எனபாலு பணத்தில் சேவை செய்தார்!!
பேரின்பநாயகத்தின் பெயரிடா உடம்பது யோன்சிங்கம் !!
செப்பியதும் செய்து முடிக்கும் மந்திரி இவர்!!
யூனியன் விளையாட்டை ஊக்குவித்த முதுமை இளமை இவர்!!
வீரர்களுக்கு ஆலோசனை கூறி ஊக்கம் கொடுத்த ஊக்கியவர்!!
ஊரில் நீதியின் பக்கம் நிற்கும் நிரபராதி!!
குருவாக இருந்தாலும் குறுக்கிடும் நீதிபதி!!
அன்னையின் தேர்பாதை கண்ட ஆனையூர் அருளப்பர் இவர்!!
தாயா, தாரமா என பட்டிமன்றம் நடத்திதமிழ் வளர்த்த தமயன்!!
கடற்தொழில் சங்கத்தை பெறுப்பபேற்று முனேற்றிய முதலாளி !!
இருக்கும் வரை தெரியவில்லை இவர்சேவை !!
மடிந்த பின் தான் தெரிகிறது மணி மகுடம்!!
அடை மழை காலத்திலும் அனலாய் கொதிக்கிறது உம் பிரிவு!!
இந்த உலகம் பெரியது என்பதை மறந்து பல முறை நீ விட்டு சென்ற கால் தடங்களுக்கு காவல் இருக்கின்றோம்!!
கரை தொடாத அலைகளென கனக்கிறது அழியாத உம் ஞாபகங்கள் !!
நீங்கள் சூரியன் நாம் தீக்குச்சி கடவுள் உள்ளம் செய்ததென்ன பிழையா !!
கருணை இன்றி உம் உயிர் பறிப்பா!!
கெட்டவை ஆழும் பூமி இங்கு வாழ தகுதியில்லை சாமி உமக்கு!!
தமிழ் புரவலர் ஆனையூரான்