உண்ணும் உணவு உயிர்நீர் காற்று
எண்ணும் அறிவு எழும்நல் உணர்வையும்
தன்னு றவான தரணி உயிர்க்கு
தருவதற் கென்றே தரணியில் வீற்றாள்!
இயற்கை நலனும் இணைவகைத் துணையும்
வயப்படும் வண்ணம் வாழ்வினி லென்றும்
இயற்படி கிடைக்க இதன்விதி செய்தாள்
இலகுவு மாக இவளே செய்தாள்!
வருமுன் காத்தல் வந்தபின் அழித்தல்
ஒருவகை மாயையை ஒழித்திடல் தொட்டு
மறுமண் வாழ்வை மனதி னிலேற்றி
திருமண் திலங்க திளைத்தாள் மரியாள்!
மாதா மகிமை மாவுல கதனில்
ஏதோ வென்று இயம்பிட இயலா
ஆதார் அவளே அவனி உயிர்க்கு
தீதெதும் கூட திசைக் காப்பவளே!
No Comment! Be the first one.