வதைத்தார் பலரும் வழிநெடு கெங்கும்
சிதைத்தார் மேனியில் சிலுவை அறைந்து
அதைத்தான் சுமந்தாய் அவரது பாவம்
அவரது ஆயும் அகத்தினில் ஏற்றாய்!
புதைத்தால் புழுபடும் புண்ணிய உடலை
புண்ணாய் பார்த்தவர் புண்ணிய மடைய
பதைத்தாய் விழுந்தும் பலங்கொண் டெழுந்து
பாவத் திற்கான சம்பள மதுவோ!
தெளித்த செந்நீரில் தேசம் நனைய
தெளிவாய் மனத்தில் அன்பை இருத்தி
வலிக்கும் வலிக்கே வலியைத் திருப்பி
வழி நடந்தாய்நீ வழிதனில் வாழிய யேசுவே!
இறுதியில் ஏழு வார்த்தையை சொன்னாய்
இலங்க பூமி ஏழும் சூத்திரம்
வருவா எனயாம் வைத்த குறிக்கு
வளமார் புவியியல் மீண்டும் உயிர்த்தாய்!
புனித வெள்ளி புலரு மித்திருநாள்
புவியில் உயிர்த்த ஏசுவே எங்கள்
மனித குணத்தின் மாசை நீக்கி
மன்னித் தருளும் ஏசு நாதா(ர்)
ஆனையூரான்
No Comment! Be the first one.