மண்டியிட்டு கேளெதுவும் கிடைக்கும்
கண்ணசைவில் சூரியனின் வெளிச்சம்
கருணை மனக்கூட்டினிலே அனிச்சம்
பெண்ணெனவே பேருடையாள் பொருத்தம்
பேரழகு ஆலயத்தாய் இருப்பும்!
வருவாரின் மனத்துயரை விரட்டும்
வல்லமையை வசிப்போருள் பெருக்கும்
தருவாரின் தர்மத்தை வாழ்த்தும்
தாய்மாதா பார்வையதே நிகழ்த்தும்!
எவ்விடத்தும் நிறைந்தவளே உள்ளாள்
ஏறெடுத்தால் உன்தேவை தள்ளாள்
பவ்வியமாய் பார்த்திருப்பாள் பொழுதை
பலனளிக்க ஊன்றிடுவாள் விழுதை!
மண்டியிட்டு கேளெதுவும் கிடைக்கும்
மனந்தெளிவாய் மகிழ்ச்சியது திறக்கும்
தெண்டனிட்டால் திருப்பங்கள் உதிக்கும்
தீதெல்லா முனைவிட்டே பறக்கும்!
No Comment! Be the first one.