துன்பமிலை
மானிடப் பிறவி மகத்துவம் வாய்ந்தது
மறந்தார் பலபேரும்
காணும் இடர்களை கணக்கில் கொண்டு
களைத்தார் சிலபேரும்
இருநிலை வாழ்வு என்பதை மறந்து
இருப்பார் அறியாரே
ஒருநிலை மனதை ஒறுக்கிப் பார்த்து
உயர்வார் பெரியாரே!
சிற்றுயிர் பலவும் சிறப்புடன் வாழ்வதை
சிந்திப்பதே இல்லை
உற்று அவைகளின் உண்மை யறிந்தால்
உமக்கும் கவலையிலை!
பற்றிய வாழ்வை பற்றுடன் வாழப்
பழகு துன்பமிலை
பற்றா தென்று பறக்கும் நோக்கில்
பற்றும் துன்பநிலை!
No Comment! Be the first one.