தமிழச்சி
கண்ண சைவில் அழைப்பிருக்கும்
கனியி தழ்தேன் படிந்திருக்கும்
கன்ன மிரண்டும் சிவந்திருக்கும்
கன்னத்தில் வெட்கம் குடியிருக்கும்
இழைய சீவியக் குழலில்
ஈரத்தின் வாசனை நிறைந்திருக்கும்
குழைந்த இடைதனில் நெளிவிருக்கும்
குங்கும நெற்றியில் கலையிருக்கும்!
செவ்வா யிடையே முத்திருக்கும்
சீர்வரிசை போலது ஒத்திருக்கும்
பவ்விய நடையில் தளர்விருக்கும்
பார்ப்பவர் எவருக்கும் பசியெடுக்கும்!
எவ்வா றிவளைக் கேட்டபதென
எண்ணியக் கேள்வி நெஞ்சிருக்கும்
திவ்விய தேசக் கலசமென
தேகப் பரப்பினில் இரண்டிருக்கும்!
அள்ளிப் பருக நினைவிருக்கும்
அவளது இசைவில் தடையிருக்கும்
கிள்ளும் ஆசைகள் மனமடுக்கும்
கிளர்ச்சிக்கு வேலி குணமமைக்கும்!
தமிழச்சி என்ற செருக்கிருக்கும்
தருவதன் அறனை புரிந்திருக்கும்
இமியும் இழக்கா வகையறிந்து
இன்ப மெனினும் கதவடைக்கும்