ஒவ்வொரு நாளும் திருநாள்தானே
சிலநாள் கூத்து சிந்திப்பதில்லை
சினமும் வன்மமும் அந்திப்பதில்லை
பலரும் இதனை பகுத்தறியாது
பக்குவ நிலைக்கு வருவதுமில்லை!
நிலையா வாழ்விது நினைப்பதுமில்லை
நினைத்து நடந்தால் ஏதொருத்தொல்லை
வளைவும் நெளிவும் வழிதனிலுண்டு
வாழ்விய லதிலே சிறுசிறுத்துண்டு!
ஒருநாள் என்பது நிச்சயமாகும்
ஒவ்வொரு நாளிலும் உணர்ந்தால்போதும்
வருகிறத் துன்பம் வழிதனும்மாறும்
வலியும் கவலையும் வலுவிழந்தோடும்!
அருநிலை இறையும் அதுவேகதியும்
பெறுகிற சுகமும் பெரிதேயாக
ஒருநிலை வாழ்வில் ஒன்றும்வேளை
ஒவ்வொரு நாளும் திருநாள்தானே!
No Comment! Be the first one.